ETV Bharat / bharat

பரிசு கடையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்!

author img

By

Published : Nov 16, 2020, 5:15 PM IST

புதுச்சேரி: வெள்ளாளர் வீதியில் இயங்கி வந்த பரிசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசு கடையில் தீ விபத்து
பரிசு கடையில் தீ விபத்து

புதுச்சேரி மாநிலத்தின் வெள்ளாளர் வீதியில் ‘பிரியங்கா கிஃப்ட்ஸ்’ என்ற பரிசு கடை இயங்கி வந்தது. இந்தை கடையில் நேற்றிரவு (நவ.15) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசமாயின.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில், பட்டாசு வெடித்து, அதன் பொறி கடைக்குள் விழுந்தால் தீப்பிடித்ததா அல்லது மின் கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் வீட்டில் திடீர் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.