சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் காவல் துறை அலுவலர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓர்ச்சா பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய ஐஇடி வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காவல் துறை அலுவலர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு வீசியதில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.