சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு பாட்டியுடன் விளையாடச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. கூலி தொழிலாளியான அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, உறவினரின் வீட்டில் அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையே, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆதாரங்களை சேகரித்தனர். சிறுமியின் மாமா குடிபோதையில் இருந்த நிலையில், இக்குற்றத்தை அவர் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மகளிடம் பாலியல் அத்துமீறல் : தந்தை சிறையில் அடைப்பு