அமராவதி: தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இரு அண்டை மாநிலங்களில் உள்ள "அரிசி கடத்தல் மாஃபியாவால்" மக்களின் நலத்திட்டங்கள் பறிக்கப்படுவது குறித்து தீவிர கவலை உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் "கடத்தல்காரர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு பொது விநியோக அரிசியை கடத்தி வருகின்றனர். கடத்தல் அரிசியை ஆந்திராவில் உள்ள மில்களுக்கு அனுப்பி, பாலிஷ் செய்து, கடத்தல் கூட்டாளிகளுக்கு திருப்பி அனுப்புகின்றனர். அது, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு வெளிச்சந்தையில் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அல்லது கர்நாடகாவிற்கு கடத்தப்படுகிறது" என கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி கடத்தல் மேற்கொள்ளப்படும் ஏழு சாலை வழிகளையும் அந்த கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார். "கடந்த 16 மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் குப்பத்தில் நான்கு வெவ்வேறு காவல் நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சுமார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஆந்திரா-தமிழகத்தில் நடைபெறும் பொதுவிநியோக அரிசி கடத்தலின் அளவை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
எல்லையில் "விழிப்புணர்வு இல்லாதது" கடத்தலுக்கு உதவுவதாக குறிப்பிட்ட அவர், அரிசி கடத்தலைத் தடுக்க விழிப்புணர்வை முடுக்கிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் இதேபோன்ற கடிதத்தை மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ளார், இது ஆந்திர-தமிழ்நாடு-கர்நாடகா எல்லைகளில் கடத்தல் அச்சுறுத்தலைத் தடுக்க கண்காணிப்பை முடுக்கிவிட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
இதையும் படிங்க:கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 2 சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு!