ETV Bharat / bharat

2023 நிதித் திட்டமிடல் - பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்! - பொருளாதார நிபுணர்கள் கருத்து

2023ஆம் ஆண்டுக்கான நிதித் திட்டமிடலில், நமது கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால நிதித் தேவைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சீராக திட்டமிட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Set
Set
author img

By

Published : Jan 5, 2023, 9:57 PM IST

ஹைதராபாத்: புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். உங்கள் நிதித்திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது. இந்த ஆண்டு எந்தெந்த பொருளாதாரத் தேவைகளை முடிக்க வேண்டும்? என்று மதிப்பாய்வு செய்து நல்ல நிதித்திட்டங்களை உருவாக்குங்கள். நிதி திட்டமிடல் என்பது ஒரு நாள் வேலை அல்ல. கடந்த காலத்தில் நாம் சிறப்பாக கையாண்ட தேவை எது? எதிர்காலத்திற்கு தேவையான நிதித்திட்டம் எது? என நமது கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால தேவைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து திட்டமிட வேண்டும். அதற்காக பொருளாதார நிபுணர்கள் கூறிய சில பயனுள்ள குறிப்புகளைப் பார்க்கலாம்...

அவசர நிதி: இந்த ஆண்டு முழுமைக்குமான சீரான நிதித்திட்டத்தை உருவாக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளுக்காக குறைந்தது ஆறு மாதங்களுக்கு தேவையான அவசர நிதியை ஒதுக்கி வையுங்கள். எதிர்பாராத எல்லா செலவுகளுக்கும் தயாராக இருக்க இது உதவும். வங்கி சேமிப்பு கணக்கு, லிக்விட் மியூட்சுவல் பண்ட்ஸ், நிலையான வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் இந்த அவசர நிதியை சேமிக்கலாம்.

முதலீடுகள்: முதலீட்டுத் திட்டங்களை தாமதப்படுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ கூடாது. எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறோம்? என்பதைப் பொறுத்தே லாபமும் இருக்கும். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு வருவாயை பெருக்க முடியும். முதலீடுகள் தொடர்பாக ஜனவரியில் நீங்கள் எடுத்த முடிவுகளை குறைந்தபட்சம் டிசம்பர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்திவிடுங்கள்.

அதாவது, இந்த ஆண்டு நீங்கள் போட்ட திட்டம் இந்த ஆண்டிலேயே அமல்படுத்தியதை உறுதி செய்யுங்கள். குறைந்தபட்சம் 5 முதல் 10 சதவீதம் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இது உங்களது நிதி இலக்குகளை விரைவாக அடைய உதவும்.

வரித் திட்டமிடல்: வரித் திட்டமிடல் முக்கியமானது. நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே வரி விலக்குக்கு ஏற்ற நிதித் திட்டங்களை எடுக்க வேண்டும். கடந்த 9 மாதங்களில் நீங்கள் செய்த முதலீடுகளைச் சரிபார்க்கவும். நிதியாண்டில் இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இப்போது அந்த முதலீடுகளை முடிக்க வேண்டும். ஏப்ரல் 2023 முதல், வரி சேமிப்புத் திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அச்சம் வேண்டாம்: பயம் என்பது நமது நிதித் திட்டங்களை பாதிக்கிறது. முதலீடுகள் எப்போதும் நீண்ட கால சேமிப்பு அல்லது தேவைகளை நோக்கியே இருக்க வேண்டும். பங்குகள் வீழ்ச்சியடையும் போது, சிலர் கவலையடைந்து அவற்றை விற்கிறார்கள். இதில் வெற்றி பெற வேண்டுமானால், தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். இலக்கை நிர்ணயம் செய்து, அதை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையான மாற்றங்களை செய்யுங்கள், அதற்கேற்றார்போல் முதலீடுகளை திட்டமிடுங்கள்.

முதலீட்டுத் தொகை: ஹைபிரிட் நிதித் திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கும் குறைவான நிதி இலக்குகளுக்கு பொருத்தமாக இருக்கும். ஈக்விட்டி ஃபண்டுகள் போன்றவை ஐந்தாண்டுகளுக்கும் மேலான நிதி இலக்குகளுக்கு சரியாக இருக்கும். பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் சர்வதேச நிதிகளை உள்ளடக்கும் வகையில் முதலீடுகள் பல்வேறாக வகைப்படுத்த வேண்டும். உங்களது கையாளும் திறனுக்கு ஏற்றார்போல், ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பதை கவனமாக முடிவு செய்ய வேண்டும். காரணம் முதலீட்டுத் திட்டங்களின் செயல்திறன், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது, சில நேரங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். அதனால் முதலீடு செய்யும் தொகையில் கவனம் வேண்டும்.

இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள்: உங்களது இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களையும் மதிப்பாய்வு செய்வது முக்கியம். முழு குடும்பத்தின் ஒட்டுமொத்த நிதிப் பாதுகாப்பிற்காக டேர்ம் பாலிசியை தேர்வு செய்யுங்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஃப்ளோட்டர் பாலிசியை எடுக்கலாம். சிறு வயதிலேயே பாலிசி எடுப்பது குறைந்த பிரீமியத் தொகையைப் பெற உதவும்.

இதையும் படிங்க:2023ஆம் ஆண்டில் அமலாகும் புதிய விதிகள்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.