ETV Bharat / bharat

ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி - அதர் பூனாவாலா

அடுத்த ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

COVID vaccine for children
COVID vaccine for children
author img

By

Published : Dec 14, 2021, 5:09 PM IST

நாட்டில் கோவிட் பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், குழந்தைகள் சிறார்களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டிவருகின்றன.

இதுதொடர்பாக கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் செய்யும் சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதர் பூனாவாலா முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், அடுத்த ஆறு மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனவும் கூறியுள்ளார்.

முழு பாதுகாப்புத் தன்மையுடன் தடுப்பூசி இருக்கும் எனவும், எனவே பெற்றோர் அச்சமின்றி நம்பிக்கையுடன் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தலாம் எனவும் உறுதியளித்துள்ளார்.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகளில் பூஸ்டர் டோஸ்களும், குழந்தைகளுக்கான தடுப்பூசியும் செலுத்த முனைப்பு காட்டிவருகின்றன.

இதையும் படிங்க: Coronavirus India update: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.