டெல்லி: 2019ஆம் ஆண்டின் இறுதியில் புதிய வகை கரோனா வைரஸான கோவிட் பெருந்தொற்று பாதிப்பு அறியப்பட்டது. முதன்முதலில் சீனாவின் வூகான் நகரில் இந்த பெருந்தொற்று பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர்.
அதன்பின்னர் இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்நிலையில் கடந்தாண்டு முதல் அலை தாக்கியது. இதில் பல்வேறு மக்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது அலையிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. தற்போது அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதில் மத்திய- மாநில அரசுகள் முழுவீச்சில் வேகம் காட்டிவருகின்றன.
இந்நிலையில் குழந்தைகளுக்கான நோவா வாக்ஸ் கோவிட்-19 தடுப்பூசி சோதனை ஜூலையில் தொடங்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கரோனா பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு உலக சுகாதார அமைப்பு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில், “குழந்தைகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது” குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கிருமிநாசினி: விரைவில் அறிமுகம்!