ETV Bharat / bharat

சரக்கு லாரி மீது மினி லாரி மோதி விபத்து - 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! - அகமதாபாத் சாலை விபத்தில் 10 பேர் பலி

Gujarat accident: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் நள்ளிரவில் சரக்கு லாரி மீது மினி லாரி மோதிய கோர விபத்தில், பத்து பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

Serious accident
விபத்து
author img

By

Published : Aug 11, 2023, 4:42 PM IST

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் பவ்லா அருகே நேற்று(ஆகஸ்ட் 10) நள்ளிரவில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ராஜ்கோட் - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பகோத்ரா என்ற பகுதியில் சரக்கு லாரி நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு லாரி மீது மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்தில் மினி லாரியில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மினி லாரி சோட்டிலாவில் உள்ள பிரபலமான சாமுண்டா தேவி கோயிலில் இருந்து திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அகமதாபாத் மாவட்ட எஸ்பி அமித்குமார் கூறும்போது, "ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் மினி லாரியில் சோட்டிலாவில் உள்ள சாமுண்டா தேவி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் இரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் பஞ்சர் ஆகி சாலையில் நின்று கொண்டிருந்தது. சாலையில் சரக்கு வாகனம் நிற்பதை கவனிக்காத மினி லாரி ஓட்டுநர், அதன் மீது மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் விபத்து நடந்ததாக தெரிகிறது. விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள், 3 குழந்தைகள். காயமடைந்த 5 பேர் பகோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி லாரியில் பயணித்த மற்றவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உடல்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

அதேபோல், இன்று(ஆகஸ்ட் 11) காலையில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை சந்திப்பு எதிரில் கோர விபத்து நடந்தது. சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.