புதுச்சேரி: புதுவை பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து நடத்திய நினைவில் வாழும் தமிழறிஞர்களின் தமிழ் தொண்டுகள் என்ற தலைப்பில், பன்னாட்டு கருத்தரங்கம் புதுச்சேரி பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை கலையரங்க கூடத்தில் நடைபெற்றது.
இதில் மனிதவள மேம்பாட்டு மைய புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம் வரவேற்க 13 நாடுகளிலிருந்து 87 பேராளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது தொடர்ந்து பொன்னி வீரப்பன் எழுதிய உலகத் தமிழர் நூலை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் வெளியிட, தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார்.
இந்த பன்னாட்டு கருத்தரங்கில் லண்டன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க தலைவர் அடைக்கலம் இளஞ்செழியன், சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பேராசிரியர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேராளர்கள் இலங்கை சேனாதிபதி ராஜா, லண்டன் பகிரதன் அமிர்தலிங்கம், மலேசியா ராமநாயகம், வட அமெரிக்கா பாலசாமிநாதன், ஆஸ்திரேலியா கருப்பையா ராமநாதன், சுவிட்சர்லாந்து நல்லதம்பி சரவண பெருமாள், ஜெர்மனி மாவைதங்கராசா, லண்டன் சரவண முத்து பூலோகநாதன் ஆகிய சிறப்பு பேராளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இதுகுறித்து உலக தமிழ் பண்பாட்டு இயக்க சிறப்பு தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் கூறும் போது, அடுத்த மாதம் 6 மற்றும் 7ஆம் தேதி 15ஆவது உலக தமிழ் பண்பாட்டு மாநாடு தெள்ளார் நந்திவர்மன் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 13 நாடுகளிலிருந்து 87 பேராளர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாய்பாபா மகா சமாதியை அடைந்த தினம் - சீரடியில் பக்தர்கள் தரிசனம்!