நாட்டின் கடற்படை தினம் இன்று(டிச.4) அனுசரிக்கப்படும் நிலையில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமை கமாண்டர் அதுல் குமார் ஜெயின் நாட்டு மக்கள், சக வீரர்களுக்கு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பின்மைக்கான சூழல் அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். எனவே, ஹெலிகாப்படர், ட்ரோன், பி-8ஐ போன்ற உபகரணங்கள் கொண்டு தொடர் ரோந்துப் பணிகள் கடற்படை பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கடற்படையினர், கடலோர காவல் படையினருக்கு முறையான தொழில்நுட்பு சார் பயிற்சி வழங்கப்பட்டு நேர்த்தியான ஒருங்கிணைப்பை இந்தியக் கடற்படை மேற்கொண்டுவருகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: உலக அளவிலான சிறந்த ஆசிரியருக்கான பரிசு வென்ற ரஞ்சித்சிங் டிசாலே