கர்நாடகா மாநிலத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், இன்று காலை பாதுகாவலர் ஒருவர் போஸ்டரை மாற்றியுள்ளார். கம்பத்தின் உயரத்திலிருந்து போஸ்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெங்களூரு டி.சி.பி (மேற்கு) சஞ்சீவ் எம் பாட்டீல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “போஸ்டரை மாற்றுவது பாதுகாவலரின் வேலை இல்லை. இருப்பினும், அவர் ஏன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்றார்.
கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு திரையரங்குகள் செயல்பட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கர்நாடகாவின் சிவமோகாவில் 50 விழுக்காடு திரையரங்குகள் திறக்கப்பட்டன.