ETV Bharat / bharat

இ-ரிக்‌ஷாவின் பேட்டரி திருட்டு - இரு தரப்பினர் மோதலால் 144 தடை உத்தரவு!

author img

By

Published : Jul 2, 2023, 10:21 AM IST

ஜார்க்கண்டில் இ-ரிக்‌ஷாவின் பேட்டரி திருடுபோனது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக் கொண்டதால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இ-ரிக்‌ஷாவின் பேட்டரி திருட்டு - இரு தரப்பினர் மோதலால் 144 தடை உத்தரவு!
இ-ரிக்‌ஷாவின் பேட்டரி திருட்டு - இரு தரப்பினர் மோதலால் 144 தடை உத்தரவு!

தான்பட்: ஜார்க்கண்ட் மாநிலம் தான்பட் மாவட்டத்தில் கைலுதி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜனார்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக இ-ரிக்‌ஷா வாகனம் ஒன்றை வைத்து உள்ளார். இந்த நிலையில், ஜனார்தனின் இ-ரிக்‌ஷா வாகனத்தின் பேட்டரி திருடு போயுள்ளது. இந்த இ-ரிக்‌ஷாவின் பேட்டரியை அருகில் வசித்து வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்தான் திருடி இருப்பார் என ஜனார்தனின் சமூகத்தார் குற்றம் சாட்டி உள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக ஜனார்தன் தரப்பினர், மற்றொரு தரப்பினரிடம் இது தொடர்பாக கேட்டு உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் இது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசிக் கொண்டுள்ளனர்.

அதேநேரம், சில வாகனங்களையும் இரு தரப்பினர் கடுமையாக சேதப்படுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாது, சில வீடுகளையும் அவர்கள் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனையடுத்து இரு தரப்பினரிடமும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இருப்பினும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. எனவே, கூடுதல் காவலர்களை காவல் துறை சம்பவ இடத்தில் இறக்கி உள்ளது. அப்போதும் இரு தரப்பினரும் தங்களது கைகலப்பை நிறுத்தவில்லை. எனவே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி உள்ளனர்.

மேலும், இந்த கலவரத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், அந்த பகுதி முழுவதும் ஏராளமான காவல் துறையினர் குவிப்பால் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், காத்ராஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சட்டாபாத், கெலுதி மற்றும் அகாஷ்கினாரி ஆகிய 3 பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தான்பட் துணை மண்டல மாஜிஸ்ட்ரேட் பிரேம் குமார் தெரிவித்து உள்ளார். மேலும், தான்பட் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏராளமான காவல் துறையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.