ETV Bharat / bharat

சார்வாக்கர், திப்பு சுல்தான் பேனர் சர்ச்சை... சிவமூகாவில் 144 அமல்

சார்வாக்கர், திப்பு சுல்தான் ஆகியோரின் பேனர்கள் வைப்பதில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக கர்நாடகாவின் சிவமூகா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சார்வாக்கர் பேனர் சர்ச்சை... சிவமூகாவில் 144 அமல்

author img

By

Published : Aug 16, 2022, 7:57 AM IST

Updated : Aug 16, 2022, 8:35 AM IST

பெங்களூரு: கர்நாடகாவின் சிவமூகா மாவட்டத்தில் உள்ள அமிர் அகமது ரவுண்டானாவில் நேற்று (ஆக. 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு தரப்பினர் அங்கு சார்வாக்கரின் பேனரை வைக்க முற்பட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் திப்பு சுல்தானின் பேனரை வைக்க முன்வந்துள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.

இதையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மேற்கொண்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின், இருதரப்பும் பேனர் வைக்க முற்பட்ட இடத்தில், அதிகாரிகள் தேசிய கொடியை நிறுவியுள்ளனர். மேலும், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வன்முறை நடந்த பகுதிக்கு அருகே உள்ள காந்தி பஜாரில், நேற்றிரவு தனது கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரேம் சிங் (20) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், மாலையில் நடைபெற்ற பேனர் தொடர்பான வன்முறைக்கும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, சிவமூகா மாவட்டத்திற்கு வரும் ஆக. 18ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிவமூகா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆக. 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை நடந்த பகுதிகளில் அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,"இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது. வன்முறைக்கு காரணமானவர்கள் மீதும், அமைதிக்கு குந்தகம் விளைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் இருவேறு இடங்களில் தாக்குதல்... போலீஸ் உள்ளிட்ட 2 பேர் காயம்

Last Updated : Aug 16, 2022, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.