ஸ்ரீநகரின் குல்பாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் நேற்றிரவு (ஏப்ரல் 6) முதல் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்போதுவரை பயங்கரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் சோப்பூரில் உள்ள போலீஸ் போஸ்ட் பேருந்து நிலையத்தின் மீது கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 3) கைதுசெய்யப்பட்டனர்.
மூன்று பயங்கரவாதிகள் பாரதிய ஜனதா தலைவர் அன்வர் கான் இல்லத்தின் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ஒரு காவலர் இறந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.