டெல்லி: உலக சுகாதார அமைப்பு இன்று (மே 6) வெளியிட்ட புள்ளிவிவரப்பட்டியலில், "இந்தியாவில் 47 லட்சம் பேர் கரோனா பாதிப்பால் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”அறிவியல் பொய் சொல்லாது.., ஆனால் மோடி சொல்லுவார்..!” எனப் பதிவிட்டு, கரோனா பாதிப்பால் தங்களது அன்பிற்குறிய உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவரது ட்வீட்டில், “கரோனா பாதிப்பால் 47 லட்ச இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு வெறும் 4.8 லட்சம் பேர் மட்டுமே இறந்ததாகத் தெரிவித்துள்ளது. அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் மோடி சொல்லுவார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடாகத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த தரவுகல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விட 10 மடங்கு அதிகமாகும், உலகம் முழுக்க உள்ள கணக்கெடுப்பில் மூன்றாவது இடமாகும்.