ETV Bharat / bharat

மூன்று வயது சிறுமியை ஹிஜாப் அணிய வற்புறுத்திய பள்ளி மீது பெற்றோர் புகார்

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய மிஷன் பள்ளியில், மூன்று வயது சிறுமியை ஹிஜாப் அணிந்துவரும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

school
school
author img

By

Published : Aug 30, 2022, 10:04 PM IST

அலிகார்: உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் பன்ஜிபூரில் உள்ள இஸ்லாமிய மிஷன் பள்ளியில், மூன்று வயது சிறுமியை ஹிஜாப் அணிந்துவரும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும், பெண் குழந்தைகளுக்கு ஹிந்தி கற்பிக்கப்படவில்லை என்றும், சிறுமியின் தந்தை முகமது அமீர் குற்றம் சாட்டியுள்ளார். பள்ளிக்கு கார்ட்டூன் பேக்குகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமீர் புகார் அளித்த நிலையில், சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், அமீர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என பள்ளி மேலாளர் கவுனன் கௌஷர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தற்கொலை, விபத்துகளால் உயிரிழப்பு... தமிழ்நாட்டிற்கு 2ஆம் இடம்... அதிரவைக்கும் புள்ளிவிவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.