ஆயுஷ் மருத்துவர்கள் கரோனாவுக்கான மருந்துகளை விளம்பரம் செய்வதற்கும் பரிந்துரை செய்வதற்கும் கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆயுஷ் மருத்துவர்கள் யாரேனும் அவ்வாறு செய்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2015இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என மாநில அலுவலர்களுக்கு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் கொடுத்தது.
கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை மட்டுமே ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரை செய்யலாம். கரோனாவை குணப்படுத்தும் என எந்த மருந்தையும் அவர்கள் விளம்பரப்படுத்தவோ பரிந்துரை செய்யவோ கூடாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்காக ஆயுஷ் மருத்துவத்தை ஆராய்ச்சிக்குள்ளாக்குக - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்