ETV Bharat / bharat

ஹத்ராஸ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கோரி தாக்கல்செய்த மனுவை உச்ச நீதமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

author img

By

Published : Dec 2, 2020, 4:29 PM IST

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை ஊடகத்தில் வெளியிட அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான சூர்யா காந்த், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, இதுகுறித்த அனுமதியை நீதிமன்றம் அளிக்காது, மனுதாரர் விரும்பினால் அரசை அணுகலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

விசாரணை தாமதமாக நடைபெறுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், "இம்மாதிரியான விவகாரங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை. கருத்துச் சுதந்திரத்திற்கு உரிமை உண்டு. அதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவது நற்பேறானது. இதற்கு மற்றொரு சட்டத்தை இயற்ற முடியாது" என்றது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதியன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முதுகெலும்பு உடைத்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை, சிலர் கண்டெடுத்தனர். அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை செப்டம்பர் 30ஆம் தேதியன்று நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.