குறிப்பிட்ட தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும்பட்சத்தில் முடிவுகளைச் செல்லாததாக அறிவித்து மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்தத் தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் மனு தாக்கல்செய்தார்.
அதில், அத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி ஆகியவற்றிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.