ETV Bharat / bharat

கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உடல் - கொலையா? தற்கொலையா?

பிகார் மாநிலத்தில் காணாமல் போன உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் இரண்டு நாள்களுக்குப் பின் கழிவுநீர் தொட்டியில் இருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உடல்! - கொலையா? தற்கொலையா?

author img

By

Published : Apr 23, 2022, 6:21 PM IST

ஃபரிதாபாத் (பிகார்): பிகார் மாநிலம் ஃபரிதாபாத் நகரில் ஹிமான்சு என்ற 29 வயது வழக்கறிஞர் அவரது மாமாவுடன் வசித்து வந்தார். இவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்ற செவ்வாய்க் கிழமை மாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற ஹிமான்சு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவரின் நண்பரும், மாமாவும் ஹிமான்சை தேடியுள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று அவர்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள இந்திரபிரசாத் 2ஆவது காலனியில் உள்ள கழிவுநீர் தொட்டி ஒன்றில் ஒருவரின் சடலம் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததது.

இதையடுத்து அங்குச் சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு சோதனை நடத்தியதில் அது ஹிமான்சின் உடல் எனக் கண்டறிந்தனர். இது குறித்துப் பேசிய காவல்துறை செய்தி தொடர்பாளர் சூப் சிங், ‘ஹிமான்சின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடக்கிறது. ஹிமான்சு கொலை செய்யப்பட்டரா இல்லை விபத்தா எனக் கூடிய விரைவில் கண்டுபிடிக்கப்படும்’ எனத் தெரிவித்தார். காணாமல் போன வழக்கறிஞர் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ராமஜெயம் வழக்கு, துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.