ETV Bharat / bharat

'தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு குஜராத் அரசின் அலட்சியமே காரணம்' - உச்ச நீதிமன்றம் - நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு

அகமதாபாத் : ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குஜராத் அரசின் அலட்சியமே காரணமென உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குஜராத் அரசின் அலட்சியமே காரணம்” - உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Nov 27, 2020, 4:14 PM IST

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் உதய் சிவானந்த் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (நவ.27) அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்த மருத்துவமனையில் மொத்தம் 33 கரோனா தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்றுவந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தீ பரவியதன் காரணமாக 5 பேர் அதில் சிக்கி உயிரிழந்தனர். 28 கரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட நோயாளிகள் வேறு கோவிட்-19 மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து செய்திகள் மூலம் அறிந்த உச்ச நீதிமன்றம், இந்த சம்பவத்தை தானே முன்வந்து பொது நலன் வழக்காக விசாரணைக்கு எடுத்து இன்று விசாரித்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த சம்பவம் குறித்து குஜராத்தில் அவசர கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. தீ விபத்து பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

இதனையடுத்து நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, “இது முதல் சம்பவம் அல்ல. இந்த சம்பவத்திற்கு முன் பல உயிரிழப்புகள் இதே வகையில் நடைபெற்றுள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

ராஜ்கோட் மருத்துவமனையில் 6 கோவிட் நோயாளிகளின் உயிரை பறித்த தீ விபத்திற்கு குஜராத் அரசின் அலட்சியமே காரணம். மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தீ விபத்துகளை தடுக்க மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைமை தீயணைப்பு அலுவலர் எம்.எஃப். தஸ்தூரை குஜராத் அரசு அணுக வேண்டும். அத்துடன், இது தொடர்பாக டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அகமதாபாத்தில் கரோனா மருத்துவமனையில் இதே போல தீ விபத்து ஏற்பட்டு சிலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.