ETV Bharat / bharat

எடியூரப்பா மீதான லஞ்ச வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்கத்தடை விதித்த உச்ச நீதிமன்றம் - எடியூரப்பாவிற்கு எதிரான நடவடிக்கைகள்

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று (செப்- 23) விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தடை விதித்து, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Etv Bharatஎடியூரப்பா மீதான லஞ்ச வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

author img

By

Published : Sep 23, 2022, 7:01 PM IST

டெல்லி: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியில் இருந்தபோது பல ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக டி-நோட்டிஃபிகேஷன் செய்ததாக அவர் மீது ஊழல் வழக்குப்போடப்பட்டது. ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) ஒப்பந்தத்தை வழங்குவதற்குகாக ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஊழல் குற்றசாட்டின்கீழ் உள்ள அவர் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்தது. இந்த உத்தரவை எதிர்த்து பி.எஸ். எடியூரப்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (செப்-23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியதுடன், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடைவிதித்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டில் டிசம்பர் 20அன்று எடியூரப்பாவின் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவு அளித்து இருந்தது.

இந்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதித்து எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க:பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.