ETV Bharat / bharat

பிரசாந்த்குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் இருவரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இதனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

apex court
உச்சநீதிமன்றம்
author img

By

Published : May 19, 2023, 12:51 PM IST

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளான தினேஷ் மகேஷ்வரி மற்றும் எம்ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்சநீதிமன்ற நிதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக குறைந்தது. இதையடுத்து, ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. கொலிஜியம் கடந்த 16ஆம் தேதி இந்த பரிந்துரையை வழங்கியிருந்தது.

இதையடுத்து, நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து நேற்று(மே.18) மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 2 நாட்களிலேயே இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு(மே.19) பேரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இருவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதிகள் மிஸ்ரா, விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்றதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. இதில், நீதிபதி விஸ்வநாதன் 2031ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி வரையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார் என்றும், 2030ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஓய்வுபெறும் போது, விஸ்வநாதன் தலைமை நீதிபதியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மேலும், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்களில் பத்தாவது நபர் விஸ்வநாதன் ஆவார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நீதிபதி விஸ்வநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கோவை சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை முடித்து, கடந்த 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த விஸ்வநாதன், குற்றவியல் வழக்குகள், வணிக வழக்குகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி மிஸ்ரா கடந்த 2009ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி மிஸ்ரா 13 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நாட்டில் உள்ள மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியலில் 21வது இடத்தில் மிஸ்ரா இருப்பதாக தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மீண்டும் 34 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், விரைவில் அது குறையும் என்று தெரிகிறது. மேலும் நான்கு நீதிபதிகள் வரும் ஜூலை மாதத்தில் ஓய்வு பெறுகின்றனர். அவர்கள் ஓய்வு பெற்றால், நீதிபதிகள் எண்ணிக்கை மீண்டும் குறையும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: சித்தராமையா எனும் நான்: சோசலிச ஈர்ப்பு தொடங்கி... 2வது முறை முதலமைச்சர் வரை கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.