டெல்லி: தலைநகர் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர், சத்யேந்தர் ஜெயின். இவர் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சத்யேந்தர் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
-
Supreme Court Extends Interim Bail of AAP Leader Satyendar Jain in Money Laundering Case Until September 25 @awstika https://t.co/4JkimLStWZ
— Live Law (@LiveLawIndia) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Supreme Court Extends Interim Bail of AAP Leader Satyendar Jain in Money Laundering Case Until September 25 @awstika https://t.co/4JkimLStWZ
— Live Law (@LiveLawIndia) September 12, 2023Supreme Court Extends Interim Bail of AAP Leader Satyendar Jain in Money Laundering Case Until September 25 @awstika https://t.co/4JkimLStWZ
— Live Law (@LiveLawIndia) September 12, 2023
இதனையடுத்து இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி சத்யேந்தர் ஜெயின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சிறைக்குச் சென்ற பிறகு சத்யேந்தர் ஜெயின் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி இருப்பதாகவும், சுமார் 15 கிலோ எடை குறைந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியாது எனவும், அவரை வெளியே அனுமதித்தால் சாட்சியங்கள் அழிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வந்த சத்யேந்தர் ஜெயின், அங்கு உள்ள கழிவறையில் தலை சுற்றி வழுக்கி கீழே விழுந்து உள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது, மீண்டும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நிபந்தனை உடன் கடந்த மே 26ஆம் தேதி 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜூலை 24ஆம் தேதி மேலும் 5 வாரங்களுக்கு நீட்டித்து இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், இன்று (செப் 12) கூடுதல் சொசிலிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜூ இடைக்கால ஜாமீனை நீட்டித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.
இதனை சத்யேந்தர் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஏற்றுக் கொண்டார். மேலும், இந்த வழக்கில் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான அங்குஷ் ஜெயினுக்கும், அவரது குழந்தைக்கு மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைக்காக 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க: தேசத் துரோக சட்டத்தை நீக்க கோரிய வழக்கு; 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!