மாரத்தா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 8) விசாரணைக்கு வந்தது. மாரத்தா மக்களுக்கு கல்வியில் 12 விழுக்காடு, வேலைவாய்ப்பில் 13 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. இட ஒதுக்கீட்டில் 50 விழுக்காடு என்ற வரம்பை மீறுவதாக இந்தச் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வின் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரம் ஒரு மாநிலத்தில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்புடையது.
எனவே, 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு வரம்பு தாண்டலாமா என்பது குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு ஒட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கு விசாரணை :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்