ETV Bharat / bharat

பெகாசஸ் விவகாரம்- அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக மூத்தப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

SC
SC
author img

By

Published : Jul 30, 2021, 1:20 PM IST

டெல்லி : இஸ்ரேல் நாட்டின் தனியாருக்கு சொந்தமான பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒன்றிய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 300 பேர் வேவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக பாரபட்சமற்ற சுதந்திர விசாரணை நடத்தக் கோரி மூத்தப் பத்திரிகையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் சூர்ய காந்திடம் முறையிட்டார். அப்போது, நாட்டின் குடிமகன்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

இதில் பாரபட்சமற்ற சுதந்திர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதைக் கேட்ட நீதிபதிகள் அடுத்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டோ மற்றும் வழக்குரைஞர் எம்எல் சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

இதையும் படிங்க : பெகாசஸ் வேவு பார்த்தது உண்மை- பிரான்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.