ETV Bharat / bharat

செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க எதிர்ப்பு.. அமலாக்கத்துறை மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்! - நீதிபதி சுந்தரேஷ்

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

SC agrees to hear plea against HC order allowing shifting TN min Senthil Balaji to private hospital

author img

By

Published : Jun 19, 2023, 7:01 PM IST

புதுடெல்லி: தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாகப் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு இருந்தது.

இந்நிலையில் திமுகவிற்கு மாறியவர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் இவரது சகோதரர் அசோக், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது செந்தில் பாலாஜி, அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் 1.60 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டி இருப்பதாக அமலாக்கத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்துக் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகாரப்பூர்வ அறையிலும் சோதனை நடத்தினர். 17 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

அமலாக்கத்துறையினர் அவரை அழைத்துச் சென்ற போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனை அடுத்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் தெரியவந்தது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜியைச் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி மனுத்தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை சார்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கை விடுமுறைக்கு முன்பாக நீதிபதி சூர்யகாந்த்,நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு விசாரிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் (Solicitor General) துஷார் மேத்தா கோரினார். இந்நிலையில் செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கு வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் ஏற்றுள்ளது.

முன்னதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ஜூன் 15ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருந்தது.

மேலும் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனுவில், அவரை மருத்துவமனையில் வைத்தே விசாரிக்க 8 நாட்களுக்கு மட்டும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. மேலும் விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் புதிய சிக்கல்? அமலாக்கத்துறை தீவிர ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.