டெல்லி: ஆயுள் தண்டனை கைதியான போலிச் சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றஞ்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், போலிச் சாமியார் ஆசாராம் பாபு மீது பெண் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் அவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து ஆசாராம் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், ஆகையால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆசாராம் பாபுவிற்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஆசாராம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிட்டார். இந்த மனு நீதிபதிகள் நவீன் சின்கா, அஜய் ரஸ்தோகி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதிகள் மனுவை வருகிற 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வீடு வீடாக ரேஷன் பொருள்கள் வழங்க அனுமதி கோரி மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்!