ETV Bharat / bharat

Saudi Iran Peace: சவுதி - ஈரான் ஒப்பந்தம்; சீனாவின் யுக்தி, இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - சிறப்பு அலசல்! - saudi iran peace imapct

தொடர் மோதல் போக்குகளில் ஈடுபட்டு வந்த வளைகுடா நாடுகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியா திடீர் சமரத்தில் ஈடுபட்டு உள்ளன. சீனாவின் தலையீட்டால் இரு நாடுகளும் சமரச உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு உள்ளன. இந்த திடீர் மாற்றத்தால் மேற்கு ஆசியாவில் அரசியல் நிலைத்தன்மை மாற்றம் காண்கிறது. சீனாவின் நிலைத்தன்மை உயரத் தொடங்கி உள்ள அதேநேரம் இந்த நிலைப்பாடு அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மேற்கு ஆசியாவின் அரசியல் விவரங்கள் குறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 28, 2023, 7:59 AM IST

ஹைதராபாத்: சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், எலியும் பூனையுமாக இருந்த வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஈரான் தங்கள் நீண்டகால விரோதத்தை கைவிட்டு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன.

அதில் இரு நாடுகளுக்கான அரசியல் பகிர்வு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சவூதி ஆதரவுடைய அரசாங்கத்திற்கு எதிராக ஏமன் ஹவுதி மக்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தூண்டி வந்த ஈரான், இப்போது மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திடீர் சமரசத்தால் லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலும் மோதல்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சமரச கொள்கை ஒரே நாள் இரவில் நடந்தது என்றால் இல்லை என்று கூறலாம். இதன் பின்னால் சீனாவின் பின்புலமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் தனது நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ளவும், அங்கு அமெரிக்காவின் செல்வாக்கைச் சரிக்கவும் இந்த திட்டத்தின் மூலம் சீனா காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு டிரம்ப் அரசாங்கம் மவுனம் காத்த நிலையில், பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை உறுதி செய்யச் சீனா பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டது.

சவூதிக்கு எதிரான டிரம்ப்பின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பைடன், அதை தன் தேர்தல் பிரச்சார கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டு உள்ளார். அதற்கு ஏற்றார் போல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு ஒரே இரவில் காலி செய்து தாலிபான்களிடம் நாட்டை விட்டுச் சென்றது, பிராந்தியத்தில் சவுதியின் நிலைப்பாடு ஆணி வேர் கொண்டு நிற்கச் செய்தது.

அதேநேரம் உக்ரைன் ரஷ்யாவின் போரால் தன் நிலைப்பாட்டை பைடன் அரசு கைவிட வேண்டி இருந்தது. மறுபுறம் இந்த போரின் விளைவால் பைடன் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பல்வேறு தரப்பிலான விமர்சனங்களை எதிர்கொள்ள ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் சவுதி அரசாங்கத்தை வற்புறுத்தும் முயற்சியில் பைடன் ஈடுபட்டார்.

ரஷ்யா - உக்ரைன் போரின் விளைவாக எரிசக்தித் துறையில் ஏற்பட்ட அபரிவித மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மேற்கு ஆசியாவின் பக்கம் அமெரிக்கா திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், சீனாவின் நட்பு நாடான ரஷ்யா, அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுக்க ஏற்கனவே பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்திருந்தது.

மறுபுறம் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் செய்து எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து எண்ணெய் விலை உயர்வைத் தக்கவைக்க ஒப்புக் கொண்டன. ஒபேக் குழுவின் ஒன்றிணைக்கும் புள்ளியாக ரஷ்யா இருப்பதாலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கு இடையே நிலவும் நீண்ட கால பிரச்சினைகள் காரணமாகவும் இந்த முறையும் அமெரிக்காவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தின.

இதில் ஏற்பட்ட நட்புறவின் காரணமாக நீண்ட தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ட்ரோன்களை, உக்ரைன் போரில் பயன்படுத்த ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கியது. சவூதி அரேபியா அதிக விலையைப் பராமரிக்கக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைவாக வைத்திருப்பது, ரஷ்யாவின் எரிசக்தித் துறையை மேலும் ஊக்கப்படுத்த முயல்வதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தான் அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், சீன நாடாளுமன்றத்தில், சவுதி - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவின் இந்த நடவடிக்கையால் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்குக் கூடுதல் நெருக்கடி உருவாகி உள்ளது.

மறுபுறம் ஈரான், இஸ்ரேலின் பரம எதிரி மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கு எதிராக பாலஸ்தீனிய கிளர்ச்சி குழுக்களுக்கு நீண்ட காலமாக உதவி வருகிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் அரபு மற்றும் இஸ்ரேலிய உறவுகளில் நீண்டகால விளைவை ஏற்படுத்தும் மற்றும் அவர்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலுடன் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா, சீனாவால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைக் கொண்டிருந்தாலும், வெளியுறவு அலுவலகம் நடுநிலையைக் கடைப்பிடித்து வருகிறது.

சீனாவின் இந்த முயற்சியால் இந்தியா - ஈரான் இடையிலான சாபஹர் - சகேதான் ரயில் இணைப்பை மேம்பாடு பணி முட்டுக்கட்டை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில், இந்தியா தனது பாரபட்சமற்ற நிலைப்பாட்டை வெற்றிகரமாக நிலை நிறுத்தி உள்ளது.

இந்தியாவுடன் நட்பாக இருக்கும் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில் சீனா குறுக்கீடுவததன் மூலம், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது இருப்பை எளிமையாக நிலைநிறுத்தி அதன் விரிவாக்கக் கொள்கையை முன்னெடுக்க முடியும் என சீனா நம்புகிறது. ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பதால் உயரும் கச்சா எண்ணெய் விலையில் பலன் அடையும் நாடுகளில் இந்தியா முக்கிய புள்ளியாக உள்ளது.

ஆனால் இந்தியாவின் திட்டத்திற்கு சீனா ஊறு விளைக்கலாம். தற்போதைய சூழலில் இந்தியாவின் முக்கியமான கவலை, நிதி ரீதியாக இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்பது தான். குறிப்பாக சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சீனா மத்தியஸ்தம் செய்து ரஷ்யாவின் பெரிய நலன்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் தெரியவரும். ஏனென்றால் இதுவரை இந்தியா நட்பு நாடுகளுக்கும், எதிரி நாடுகளுக்கும் இடையில் சமநிலைப்படுத்துவது அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிப்பது போன்ற நடுநிலை அணுகுமுறையை வெற்றிகரமாக நிர்வகிக்க முடிந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே சீனா மத்தியஸ்தம் செய்த பிறகு மேற்கு ஆசியாவில், அமெரிக்கா நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் உள்ளது. இதன் முழு நிலைமை வெளிவரும் போது, சீனாவின் எதிரியாக கருதப்படும் சூழலில் இந்தியா எந்த இடத்தில் வைக்கப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: வட கிழக்கைப் போல, கேரளாவில் மலருமா தாமரை? - சிறப்பு அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.