ETV Bharat / bharat

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்... வெண்கலப்பதக்கம் வென்ற சாத்விக், சிராக் இணை... - ஆண்கள் இரட்டையர் பிரிவு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சாத்விக், சிராக் இணை வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

வெண்கலப்பதக்கக்கதை வென்ற சாத்விக் - சிராக் இணை

author img

By

Published : Aug 27, 2022, 2:05 PM IST

டோக்கியோ (ஜப்பான்): உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் இணை, நேற்றைய காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கோபயாஷி - ஹோக்கி இணையை 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை, மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் இக் இணையுடன் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டை 22-20 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றது.

இதனையடுத்து ஆடிய இரண்டாவது ஆட்டத்தின் முடிவில் 18-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 16-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இவ்வாறு கிட்டத்தட்ட 77 நிமிடங்கள் நடைபெற்ற அரையிறுதி போட்டியின் முடிவில் இந்திய ஆடவர் இரட்டையர் பிரிவின் சாத்விக் - சிராக் இணை தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்தியா வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது.

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில், ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய இணை என்ற பெருமையை சாத்விக் - சிராக் இணை பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: பேட்ஸ்மேன்களுக்கு அப்ரிடி களத்தில் இருப்பதே சிறந்தது...கே.எல்.ராகுல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.