ETV Bharat / bharat

தொடரும் சனாதன சர்ச்சை; உதயநிதி ஸ்டாலின் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன்! - பாட்னா எம்பி எம்எல்ஏ நீதிமன்றம்

Udhayanithi Stalin Patna Court: சனாதனம் குறித்து அவதூறாகப் பேசினார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாட்னாவில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி பாட்னா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 3:20 PM IST

பாட்னா: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் சனாதனம் குறித்துத் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. பாஜக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இவரது கருத்துக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

அதேபோல், சனாதன தர்மம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் மீது பலர் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வகையில், பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கெளசலேந்திர நாராயணன் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாட்னா சிஜேஎம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இருப்பதால், அந்த வழக்கு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜனவரி 6ஆம் தேதி ஐபிசியின் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சமன் அனுப்ப உத்தரவிட்டது.

அதன்படி, உதயநிதி ஸ்டாலின் மீது ஐ.பி.சி 153ஏ, 295ஏ, 298, 500 மற்றும் 500-4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜன.15) பாட்னா நீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சனாதனம் குறித்து உதயநிதி கூறியதாவது, "சில விஷயங்களை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்குகாய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது" என தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: கோயம்பேடு அங்காடி பகுதியிலுள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் விரைவில் மருத்துவமனை - அமைச்சர் சேகர்பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.