ETV Bharat / bharat

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல்! வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்த அதிர்ச்சி? - Brij Bhushan Sharan Singh

Sanjay Singh President of Wrestling Federation of India: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

President of Wrestling Federation of India Sanjay Singh
Sanjay Singh
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 3:57 PM IST

Updated : Dec 21, 2023, 4:06 PM IST

டெல்லி : மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ள சஞ்சய் சிங், பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மலுயுத்த சம்மேளனத்தின் துணை தலைவராக இருந்த சஞ்சய் சிங்கிற்கும், காமல்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷெரோனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அண்மையில் நடந்த பாலியல் விவகாரம் காரணமாக தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது.

இந்நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் சஞ்சய் சிங் வெற்றி பெற்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் சிங், முன்னாள் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்கின் விசுவாசி எனக் கூறப்படுகிறது.

  • #WATCH | Former WFI chief Brij Bhushan Sharan Singh's aide Sanjay Singh elected as the new president of the Wrestling Federation of India

    "...National Camps (for wrestling) will be organised. Wrestlers who want to do politics can do politics, those want to do wrestling will do… pic.twitter.com/wUsYpFNvIT

    — ANI (@ANI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைமையகத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரம் பூதாகரம் அடைந்தது. இதையடுத்து அவர் பதவி விலக் கோரி இந்திய மல்யுத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் ஜாமீன் பெற்றார். தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தலை நடத்துவதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது.

தேர்தல் நடத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, ஐக்கிய சர்வதேச மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. பின்னர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த இடைநீக்கத்தை சர்வதேச மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.

இதையடுத்து நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் பொதுக் கொடியில் கலந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்!

Last Updated : Dec 21, 2023, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.