ETV Bharat / bharat

கன்னட பட குண்டுவெடிப்பு காட்சி ஷூட்டிங்கில் சஞ்சய் தத் படுகாயம்!

author img

By

Published : Apr 12, 2023, 7:43 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கன்னட படப்பிடிப்பின் போது காயம் அடைந்தார்.

Sanjay dutt wound
சஞ்சய் தத் காயம்

பெங்களூரு: பிரேம் இயக்கத்தில் துருவ் சர்ஜா நடிக்கும் படம் "KD The Devil". தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வர உள்ளது. ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில், காட்சிகள் படமாக்கப்பட்டன. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குண்டு வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முழங்கை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, காயம் அடைந்த சஞ்சய் தத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

KGF படத்தின் 1 மற்றும் 2ம் பாகங்களுக்கு பிறகு, KD படத்தில் சஞ்சய் தத் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, "The Virgin Tree" என்ற படத்திலும் சஞ்சய் தத் நடிக்க உள்ளார். அவர் தயாரிக்கும் இப்படத்தில் சன்னி சிங், மவுனி ராய், பாலக் திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திலும் சஞ்சய் தத் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பீர் பஸ்(Beer Bus) அறிமுகம்.. மதுப்பிரியர்கள் குஷி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.