டெல்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டு, பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இஷான் மிர்சா மாலிக்(4) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது உறவு பல ஆண்டுகளாக சுமூகமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே சானியா மிர்சாவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு, தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சானியா மிர்சா, "மிகக் கடினமான நாட்களில் என்னை மீட்டெடுத்த தருணங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் மற்றொரு பதிவில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? - அல்லாவைக் கண்டுபிடிக்க" என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினர்.
பிறந்தநாள் புகைப்படங்களை சானியா மிர்சா சமூக வலைதளங்களில் பகிரவில்லை. இதனால், இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக நெட்டிசன்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். அதேநேரம் இதுதொடர்பாக சானியா மிர்சாவும், சோயப் மாலிக்கும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க:குளியல் தொட்டியில் இறந்துகிடந்த இளம் பாப் பாடகர் ஆரோன் கார்ட்டர்