ETV Bharat / bharat

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் திடுக்கிடும் ட்விஸ்ட்! - மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் இரு வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முதலில் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்ற நோக்கில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் திருப்பமாக அது தற்கொலை அல்ல, கொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த விவகாரம்

author img

By

Published : Jun 28, 2022, 6:01 PM IST

சாங்லி (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா சாங்லி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு சகோதரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.

சாங்லி மாவட்டம், மஹைசல் கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். ஒருவர் டாக்டர். மாணிக் யல்லப்பா வானமோர், கால்நடை மருத்துவர். மற்றொருவர் போபட் யல்லப்பா வனமோர் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், ஜூன் 20ஆம் தேதி இரண்டு சகோதரர்களின் மனைவி, குழந்தைகள் உள்பட 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

முதலில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தற்கொலை கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அதனடிப்படையில் 25 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் தொடர்விசாரணையில், இது தற்கொலை அல்ல என்றும் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, காவல் துறை உயர் அலுவலர் மனோஜ் குமார் லோஹியா கூறுகையில், "இவ்வழக்குத் தொடர்பாக தீரஜ் சந்திரகாந்த் சுரவ்ஷே (39), அப்பாஸ் முகமது அலி பக்வான் (48) ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஒன்பது பேருக்கும் இவர்கள் விஷம் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும், தற்கொலையை நியாயப்படுத்தும் வகையில் போலியான தற்கொலை கடிதம் வைக்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு - 13 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.