மும்பை: மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் மஹைசல் கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருடைய உடல்கள் இன்று (ஜூன் 20) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், "மஹைசல் கிராமத்தில் கால்நடை மருத்துவருவராக பணியற்றவந்த மாணிக் யல்லப்பா வனமோர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து மாணிக் யல்லப்பா வனமோர் உடலுடன் அவரது தாய், மனைவி, இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டோம். இதுகுறித்து விசாரிக்க அவரது சகோதரர் போபட் யல்லப்பா வனமோர் வீட்டிற்கு சென்றபோது, அவரும், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அந்த வகையில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளது. முதல்கட்ட விசாரணையில் தற்கொலையாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. உடற்கூராய்வின் முடிவிலேயே உண்மை தெரியவரும்" என்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பலி- திக்திக் சிசிடிவி காட்சிகள்