ETV Bharat / bharat

ராஜஸ்தானில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்! - ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் கார்-பஸ் (Rajasthan car-bus collision) நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Rajasthan car-bus collision
Rajasthan car-bus collision
author img

By

Published : Aug 13, 2023, 12:26 PM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் பந்தாடி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) கார்-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.

ராஜஸ்தானின் சிகார் என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த கார், பந்தாடி கிராமத்தின் டிட்ரி சௌராஹா என்ற இடத்தின் அருகே வந்தபோது, அங்குள்ள ஒரு திருப்பத்தில் திரும்புகையில் எதிரில் வந்த பஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குழந்தை உள்பட படுகாயமடைந்த இருவருக்கு தித்வானாவில் உள்ள அரசு பாங்கர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு ஜெய்ப்பூருக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டது. இது குறித்து ஸ்டேஷன் ஆபிசர் (SO) தரம்சந்த் புனியா கூறுகையில், “சிகாரில் இருந்து வந்த வாகனம் 9 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் வந்த ஒரு கூர்மையான திருப்பத்தில் ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் கவனிக்காமல் காரும் பேருந்தும் மோதி இருக்கலாம். விசாரணைக்கு பின்னர் விபத்துக்கான காரணம் தெரிய வரும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சப்ஸ்கிரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. ரூ.18 லட்சம் மோசடி - 5 பேர் சிக்கியது எப்படி?

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் சிகாரிலிருந்து நாகௌருக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்ததாக தகவல்கல் தெரிவிக்கின்றனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திவானா எம்எல்ஏ சேத்தன் துடி, திவானா மாவட்ட ஆட்சியர் சீதாராம் ஜாட், கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷியோராம் வர்மா, துணைக் காவல் கண்காணிப்பாளர் தர்மசந்த் பூனியா, பாஜக தலைவர் ஜிதேந்திர சிங் ஜோதா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் பரிந்துரைத்தனர். முன்னதாக நேற்று ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்ததில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும், சில ராணுவ வீரர்களும் விபத்தில் காயம் அடைந்தனர்.

இதையும் படிங்க: தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி - வங்கி மேலாளர் உள்பட மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.