இமாச்சலப் பிரதேசம்: சோலனில் உள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பங்களாவை நேற்று (நவ-23) சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக வீட்டின் பராமரிப்பாளர் ராஜேஷ் திரிபாதி சோலனில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அளித்த சோலன் காவல் ஆணையர் அஜய் குமார் ராணா கூறுகையில், ‘சல்மான் ருஷ்டியின் அனிஷ் வில்லா என்ற பங்களா சோலனில் உள்ளது. இந்த பங்களாவை ராஜேஷ் திரிபாதி பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (நவ-23) ராஜேஷ் திரிபாதி மற்றும் சல்மான் ருஷ்டியின் குடும்ப நண்பர்களான ராணி சங்கர் தாஸ் மற்றும் அவரது மகன் அனிருத்தா ஷங்கர் தாஸ் ஆகியோர் அந்த பங்களாவில் இருந்த போது மதியம் ஒரு மணி அளவில் கோவிந்த்ராம் என்ற நபரும், அந்நபரின் மகன் உட்பல மேலும் சிலரும் அந்த பங்களாவில் நுழைந்து சேதப்படுத்தியுள்ளனர்’ என தெரிவித்தார்.
மேலும் வீட்டில் இருந்த இரண்டு கதவுகள் மற்றும் கண்ணாடி ஆகியவை சுத்தியலால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ராஜேஷ் திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:டெல்லி ஜமா மசூதியில் பெண்கள் நுழையத் தடை