பதின்டா (பஞ்சாப்): சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்தத் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், “பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி பிரச்சினைகளை கடுமையாக சாடினார். அக்கட்சியை, “நகைச்சுவை நிகழ்ச்சி கூடாரம்” என்றும் அழைத்தார்.
இது குறித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் மேலும் கூறுகையில், “தற்போது பஞ்சாப் காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. நவ்ஜோத் சிங் சித்து வருகைக்கு பின்னர் அக்கட்சி நகைச்சுவை காட்சியாக மாறிவிட்டது. பஞ்சாப் காங்கிரஸின் நாடகங்களுக்கு மத்தியில் வெகுஜன மக்கள் நசுக்கப்படுகின்றனர்” என்றார்.
மேலும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, “பஞ்சாப் மாநில அரசில் குழப்பம், அராஜகம் நடைபெறுகிறது” என்றார்.
தொடர்ந்து, “நோயாளிகள் இலவச சிகிச்சையைப் பெறக்கூடிய மத்திய திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) பஞ்சாபில் இடைநிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் மாநில அரசு பணம் வழங்கவில்லை” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிச்சையல்ல, உரிமை- ஃபரூக் அப்துல்லா!