சண்டிகர்: 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சிரோமணி அகாலி தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை இறுதிசெய்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சிரோமணி அகாலி தளத்தின் செயலாளர் சுக்பீர் சிங், இது பஞ்சாப்பின் அரசியலில் புதிய நாள் என்று கூறியுள்ளார்.
மேலும், "சிரோமணி அகாலி தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து 202்2 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும், வருங்காலங்களிலும் இக்கூட்டணி தொடரும். அகாலி தளம் பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளில் 97 தொகுதிகளில் போட்டியிடும். பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களில் போட்டியிடும்" என குறிப்பிட்டுள்ளார்.
27ஆண்டுகளுக்குப் பின்பு இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில், பஞ்சாப்பில் 11 மக்களவைத் தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது.
இதையும் படிங்க: சீறும் சிக்ஸர் சித்து, ஆட்டம் காணும் பஞ்சாப் முதல்வர் நாற்காலி!