ராஜஸ்தான்: பதவிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அமைச்சர் ராஜேந்திரசிங் குதா சிவப்பு டைரியின் 3 பக்கங்களை வெளியிட்டார். அதில் முதல்வரின் மகன் பெயரும், ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் பரிவர்த்தனைகளும் இடம் பெற்றிருந்தன. மேலும், குதா அரசாங்கம் தன்னை அச்சுறுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த ஜனவரி 31ஆம் தேதி சபாநாயகரிடம், முன்னாள் காங்கிரஸ் தலைவரான தர்மேந்திர ரத்தோரின் கையெழுத்து அடங்கிய டைரியை வெளியிடுவேன் என்றார். அதனைத் தொடர்ந்து நான் சிறைக்கு சென்றாலும் என்னுடைய நம்பிக்கைக்குரியவர் அந்த டைரியினை கண்டிப்பாக வெளியிடுவார் என்று கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "டைரியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வருக்கு நெருக்கமான தர்மேந்திர ரத்தோரின் கையெழுத்து இருந்ததாகக் கூறினார்.” மேலும், டைரியில் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் பற்றிய குறியீடு மற்றும் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இதனைத்தொடர்ந்து முக்கியமான பக்கத்தில் முதல்வரின் செயலாளர் மற்றும் வைபவ் இருவரும் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தேர்தல் சம்பந்தமான செலவுகள் பற்றி ஆலோசிப்பது போல உரையாடல் இருந்தது எனவும், அந்த உரையாடலில், பவாணி சமோட்டா மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் இருப்பது எப்படி? பெரும்பலான மக்கள் பணத்தை அவர் தரவில்லை மேலும், அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும், அவர் இவ்வாறு செய்தால் உடனடியாக நான் அதை சட்டபூர்வமாக அறிவிப்பேன் என அதில் கூறப்பட்டிருந்தது. என செய்தியாளார்கள் சந்திப்பில் கூறினார்.
மேலும், ஜூலை 24ஆம் தேதி குதா சபாநாயகரின் முன்பாக அந்த டைரியினை மேசையின் மீது வைத்து அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அமைச்சர் சாந்தி தரிவால் மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது, குதா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் தள்ளி வைக்கப்படுகிறார் என்றும், மேலும், அவர் அனைத்து அவைகளிலும் இருந்து நீக்க படுகிறார் என்றும், அவரோடு சேர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் தில்லாவர் நீக்கப்படுகிறார் என அறிவித்தார்.
அந்த வகையில், குதா ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷனின் பரிவர்த்தனைகள் அடங்கிய சிவப்பு டைரியின் 3 பக்கங்களை மட்டும் வெளியிட்டார். மேலும், அவர் கூறியதாவது, நான் அரசாங்கத்தை மிரட்ட வில்லை எனவும், அரசாங்கம் தான் என்னை அச்சுறுத்துகிறது என்றும், நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:சிக்கினால் ரூ.500 கோடி அபராதம் - நாளை தாக்கலாகிறது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா..! சிறப்பம்சங்கள் என்ன?