பிப்ரவரி 25ஆம் தேதி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருள்கள் நிரப்பிய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தேசியப் புலானாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் மும்பை குற்றப்பிரிவு காவலர் சச்சின் வாசே என்.ஐ.ஏ. அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் மூளையாக சச்சின் வாசே செயல்பட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம் பறிக்கத் திட்டம்
இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ”பணக்காரர்களை பீதிக்குள்ளாக்கி அவர்களிடம் பணம் பறிக்கும் திட்டத்தை சச்சின் வாசே மேற்கொண்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தி அம்பானியிடம் பணம் பறிக்கவே வெடிபொருள் கொண்ட வாகனத்தை முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் சச்சின் வாசே நிறுத்தியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின் வாசேவையும் சேர்த்து 10 பேரை என்.ஐ.ஏ குற்றவாளிகளாக இவ்வழக்கில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திராவில் இந்தி டீச்சருக்கு அடி உதை; அத்துமீறினாரா ஆசிரியர்?