திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை முதல் நடை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் டிசம்பர் 26ஆம் நடை அடைக்கப்பட்டது.
இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக நாளை(டிசம்பர் 31) முதல் எருமேலி பெருவழிப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது. குறிப்பாக கோயில் நிர்வாகம் தரப்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மகர விளக்கு பூஜையிலும், மகரஜோதி தரிசனத்திலும் கலந்துகொள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சபரிமலையில் 15ஆம் தேதி மகர ஜோதி தரிசனம்!