திருவனந்தபுரம்(கேரளா): கார்த்திகை மாதம் நாளை தொடங்குவதையொட்டி, கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று (நவ.16) மண்டல பூஜைக்காக திறக்கப்படுகிறது.
சுமார் மாலை 5 மணியளவில் கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில், தலைமை அர்ச்சகர் பரமேஸ்வரன் நம்பூதிரி சபரிமலை சந்நிதானத்தைத் திறக்கவுள்ளார். கரோனா கட்டுப்பாடுகளின்றியும் புதிய தந்திரியாக இவர் பதவியேற்றபிறகும் நடை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், ஆன்லைனிலும் புக் செய்து கொள்ளலாம். பக்தர்களின் வசதிக்காக, சபரிமலையில் அவசர சிகிச்சை, போதிய லேப் வசதிகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருபகுதியாக, கொன்னி மருத்துவக்கல்லூரியில் சிறப்பு வார்டு திறக்கப்பட்டிருப்பதோடு, பம்பையில் கட்டுப்பாட்டு மையமும் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உடல் நலப்பாதிப்புக்குள்ளான பக்தர்கள் உடனடியாக, ஐந்து நிமிடங்களில் தகுந்த சிகிச்சையைப்பெற இயலும் என்று தெரிவித்துள்ளார், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
நவ. 17ஆம் தேதியான நாளை மட்டும்(ஆன்லைன் புக்கிங் உட்பட) 28,000 பக்தர்கள் வரையில் சாமி தரிசனம் செய்ய வரலாம் எதிர்பார்க்கப்படுகிது. இது கோயில் நடை திறக்கப்பட்டபின் 49,000 என இன்னும் அதிகரிக்கலாம். 41 நாள் மண்டல பூஜை வரும் டிச.27ஆம் தேதியுடன் முடிவடைந்து திருக்கோயிலின் நடை சாத்தப்படும். அதன்பின், தொடர்ந்து மகரஜோதி பூஜைகளுக்காக, டிச.30-ல் சபரிமலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது,பக்தர்கள் அனுமதிக்கப்படயிருக்கின்றனர்.
சபரி மலை சீஷன் தொடங்குவதால், கேரள போலீசார் 13,000 இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்து தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வேண்டிய பகுதிகளில் தற்காலிக காவல்நிலையங்கள் அமைத்தும்; தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் சபரிமலை சுற்றுவட்டாரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்டுக்கு 3000 இந்தியர்களுக்கு சிறப்பு விசா - பிரிட்டன் பிரதமரின் ஹேப்பி நியூஸ்!