டெல்லி: தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் கூட்டம், அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் சனிக்கிழமை நடைபெறவிருந்தது. இந்த சார்க் மாநாட்டில், ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக தாலிபான் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் கோரியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு சார்க் கூட்டமைப்பிலுள்ள பிற நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாகக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூடவுள்ள நிலையில், நேபாளம் இந்தக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தவிருந்தது. காபூலில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபானை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தாலிபான் ஆட்சியில் உயர் அமைச்சர்களாக உள்ளவர்கள் ஐநா மன்றத்தால் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டவர்கள்.
அமீர்கான் முத்தாகி, தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டுவருகிறார். இவர், ஐநா மன்றத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.
அண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தாலிபான் தற்போது அமைத்துள்ள அமைச்சரவையில், அனைத்துத் தரப்பினருக்கான பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, தாலிபானை உலகம் அங்கீகரிக்கும் முன்பு இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்" எனப் பேசியிருந்தது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
இதையும் படிங்க: முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா செல்லும் மோடி!