ETV Bharat / bharat

ரஷ்யாவின் ராணுவ அலுவலர் கொல்லப்பட்டார் - உக்ரைன் தகவல்! - உக்ரைன் தகவல்

ரஷ்யாவின் மூத்த ராணுவ அலுவலர் மேஜர் விட்டாலி ஜெராசிமோவ் உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்
ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்
author img

By

Published : Mar 8, 2022, 3:22 PM IST

லிவ் (ரஷ்யா): ரஷ்யாவின் ராணுவம் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்றச் சண்டையிட்டது. இந்தச் சண்டையின்போது ரஷ்ய ராணுவத்தின் மூத்த அலுவலரான மேஜர் விட்டாலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யா ராணுவத்தின் மிக முக்கிய அலுவலர்களில் விட்டாலியும் ஒருவர். இவர் சிரியாபோரில் ரஷ்யப்படை சார்பாகப் பங்கெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் கிரிமியாவை 2014இல் கைப்பற்றியதில் இவர் முக்கியப்பங்காற்றினர். இந்த இறப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ரஷ்யா, உக்ரைனின் தகவலுக்கும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் மற்றுமொரு ஜெனரல் முன்னதாக தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ராணுவத்தின் 7ஆவது வான்வழிப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி உக்ரைனில் இறந்ததை ரஷ்யாவில் உள்ள உள்ளூர் அலுவலர்கள் அமைப்பு உறுதிப்படுத்தி இருந்தது. சிரியாவில் ரஷ்யாவின் ராணுவப் பரப்புரையில் சுகோவெட்ஸ்கியும் பங்கேற்றார்.

இதையும் படிங்க:உக்ரைன் ராணுவத்தில் கோவை இளைஞர்... உளவுத்துறை விசாரணை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.