ETV Bharat / bharat

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: 8 பேர் உயிரிழப்பு

மேற்கு கோதாவரி அருகே அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

author img

By

Published : Dec 15, 2021, 2:00 PM IST

Updated : Dec 15, 2021, 2:19 PM IST

விபத்து
விபத்து

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அருகேயுள்ள வேளேறுபாடு பகுதியிலிருந்து ஜங்காரெட்டிகுடம் நோக்கி இன்று (டிசம்பர் 15) ஆர்டிசி பேருந்து சென்றுகொண்டிருந்தது. சுமார் 47-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், பேருந்து ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தைக் கடந்தபோது, திடீரென ஓட்டுநர் தனது காட்டுப்பாட்டை இழந்துள்ளார். பின்னர் எதிர்பாராதவிதமாக அருகேயுள்ள ஆற்றில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

இதனையடுத்து உடனே அருகிலிருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள், தீயணைப்பு மீட்புத் துறையினர், தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணியில் மீட்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்து மோதி டிராக்டர் ஓட்டுநர் மரணம்

Last Updated : Dec 15, 2021, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.