ETV Bharat / bharat

புதுச்சேரியில் அமைதியான முறையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி - ஆர்எஸ்எஸ் பேரணி புதுச்சேரி பாலாஜி திரையரங்கம்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி தேதி மாற்றப்பட்ட நிலையில், புதுச்சேரியில் அமைதியான முறையில் நடந்தது.

Etv Bharatபோலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

author img

By

Published : Oct 3, 2022, 12:16 PM IST

புதுச்சேரி: தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. அதன்பின் உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இருப்பினும் திட்டமிட்டபடி புதுச்சேரியில் நேற்று (அக்.2) ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடந்தது. அதன்படி, ஆர்எஸ்எஸ் பேரணி புதுச்சேரி பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து மாலை 4 மணிக்கு தொடங்கியது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன், எம்பி செல்வகணபதி மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் சாலையை அடைந்து அங்குள்ள சிங்காரவேலர் சிலை அருகே மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. முக்கிய சந்திப்புகளில் பாஜக மகளிரணியினர் பூத்தூவி வரவேற்றனர். துணை ராணுவப் படையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தி நாளில் மகாத்மா காந்தி கோட்பாடுக்கு எதிராக உள்ளவர்கள் அவரை முன்னிறுத்தி புதுச்சேரியில் பேரணி செய்து கலவரம் ஏற்படுத்த நினைப்பதாக விசிக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்தது விசிகவிற்கு கிடைத்த வெற்றி - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.