புது டெல்லி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திராவுடன் தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை பணம் கொடுத்து கைப்பற்ற முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரா மீதும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும், சுகேஷ் சந்திராவும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
![Rs 7 crore worth assets of Jacqueline Fernandez seized by ED: Sources](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/275706853_261883949445433_2363996969246629426_n_1503newsroom_1647336882_745.jpg)
மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதனை ஜாக்குலின் பெர்னாண்டஸ் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையில், இருவரும் ஹோட்டல் அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.
இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துபாயில் ஜான்வி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் - பரபரப்பில் சமூக ஊடகம்