ETV Bharat / bharat

ஓடும் ரயிலில் ஆர்பிஎப்(RPF) வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர், 3 பயணிகள் பலி!

ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்(RPF) துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர் மற்றும் 3 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்
ரயில்
author img

By

Published : Jul 31, 2023, 9:02 AM IST

Updated : Jul 31, 2023, 11:36 AM IST

மும்பை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை சுமார் 5 மணிக்கு தஹிசார் ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த துயர சம்பவம், நாட்டையே அதிர்ச்சியிலும், அவநம்பிக்கையிலும் ஆழ்த்தி உள்ளது.

இந்த கொடூரமான செயலுக்கு காரணமான ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் சேத்தன் சிங் என அடையாளம் காணப்பட்டனர். அதிகாலை 5 மணியளவில், ஓடும் ரயிலுக்குள் எதிர்பாராதவிதமாக தனது தானியங்கி துப்பாக்கியால், சரமாரியாக சுட்டு உள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இந்த தோட்டாக்கள் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் பயணத்தில் மற்றொரு RPF சக ஊழியர் மற்றும் மூன்று அப்பாவி பயணிகள், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

  • VIDEO | Railway Protection Force (RPF) jawan opens firing inside Jaipur-Mumbai train killing four people: Official. The jawan has been arrested and brought to Borivali Police Station. pic.twitter.com/86cFwbt3cq

    — Press Trust of India (@PTI_News) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜூலை 31ஆம் தேதி அதிகாலை 5:23 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த சி.டி.சேத்தன், தனது எஸ்கார்ட் இன்சார்ஜ் ASI டிகாராம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.

ரயில், பால்கர் ஸ்டேஷனைக் கடந்து கொண்டிருந்த போது, அங்கே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, குழப்பமான சூழல் நிலவியது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, கான்ஸ்டபிள் சேத்தன் சிங் அந்த இடத்தை விட்டுத் தப்பிச் செல்லும் நடவடிக்கையாக, தாஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்தார். இருப்பினும், அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையின் காரணமாக, 4 பேரை பலிகொண்ட துப்பாக்கி உடன், அவர் பிடிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில், மூத்த துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSC) நிலைமையை ஆய்வு செய்து மதிப்பீடு செய்தார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு உறுதி அளிப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படை தரப்பில அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. கான்ஸ்டபிள் சேத்தன் சிங் நடத்திய, இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: விமானத்தில் தூங்கியபடி வரும் டோனி! க்யூட் ரசிகையின் வீடியோ வைரல்!

Last Updated : Jul 31, 2023, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.